News April 25, 2025
நடப்பாண்டில் 210 கடைகளுக்கு சீல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 356 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 169 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட 210 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News April 25, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE IT.
News April 25, 2025
மயிலாடுதுறையில் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே.8ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
News April 25, 2025
நற்கருணை வீரன் விருது அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை விபத்தில் படுகாயமுற்றவா்களை காப்பாற்ற உதவுபவா்களுக்கு நற்கருணை வீரன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். விபத்தில் காயமடைந்தவா்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குபவா்களை ஊக்குவிக்க நற்கருணை வீரன் விருது வழங்கப்படுகிறது. மேலும் ₹5000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.