News April 4, 2024
மக்கள் அடையாளம் காண வேண்டும்

இந்தியா தற்போது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டை உருவாக்குபவர்கள், நாட்டை அழிப்பவர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு உரிமைகளை காங்கிரஸ், INDIA கூட்டணி உறுதியாக செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 13, 2026
ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி வரக்கூடாதா? I.பெரியசாமி

திமுக என்பது ஒரே குடும்பம் தான், அதன் தற்போதைய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார், அடுத்து உதயநிதி வருவார் என ஐ.பெரியசாமி பேசியுள்ளார். உதயநிதி ஏன் அந்த இடத்திற்கு வரக்கூடாது என கேட்ட அவர், மற்றவர்கள் வரவில்லையா என கூறியுள்ளார். மேலும், அந்த குடும்பத்தில் உழைப்பு, தியாகம் இருக்கிறது எனவும், தமிழ்நாட்டு மக்களுக்காக பல நன்மைகளை செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
News January 13, 2026
சுந்தருக்கு பதில் பிளேயிங் XI-ல் யார்?

காயம் காரணமாக, NZ ODI தொடரில் இருந்து சுந்தர் விலகியதால், 2-வது ODI-ல் அவருக்கு பதிலாக பிளேயிங் XI-ல் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி அல்லது துருவ் ஜுரெல் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் ஆல்ரவுண்டர் என்பதால், அவரே பெஸ்ட் சாய்ஸ் என கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-ஐ சொல்லுங்க?
News January 13, 2026
முரசு யார் பக்கம் கொட்டும்.. போக்கு காட்டும் பிரேமலதா!

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் அதிமுக, திமுக, தவெக என தேமுதிகவுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. இதில், எந்தக் கூட்டணி அதிக சீட்டுகளை ஒதுக்குகிறதோ அந்தப் பக்கம் சாயலாம் என்ற முடிவில் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். அதேநேரம், குறைந்தது 15 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டுகள் ஒதுக்க அதிமுக, திமுகவிடம் தேமுதிக தூது சென்றதாகவும் ஒரு சாரார் பேசி வருகின்றனர். முரசு யார் பக்கம் கொட்டும்?


