News April 25, 2025

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

image

தேனி அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (70). இவா், கண்டமனூா்-கோவிந்தநகரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அம்பாசமுத்திரம் விலக்கு அருகே அரசுப் பேருந்து கோவிந்தசாமி மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமைடந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான மயிலாடும்பாறை சோ்ந்த அஜீத்குமாா் (28) போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News

News April 25, 2025

தேனி : அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

தேனி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்
▶️தேனி உதவி இயக்குநா் 04546262729
▶️தேனி வட்டாட்சியர் 4546-255133
▶️போடிநாயக்கனூர் வட்டாட்சியர் 04546280124
▶️உத்தமபாளையம் வட்டாட்சியர் 04554265226
▶️ஆண்டிபட்டி வட்டாட்சியர் 04546-242234
▶️ பொியகுளம் வட்டாட்சியர் 0454623215
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 25, 2025

தேனி : பாவமன்னிப்பு தரும் கண்ணகி கோவில்

image

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி அடிவாரத்தில் அமைந்துள்ளது மங்கலநாயகி கண்ணகி தேவி கோயில். இந்த கோயிலில் கண்ணகி, சிவன், சாய்பாபா, சங்கிலி கருப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட 63க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. கடந்த காலங்களில் முன்னோர்களுக்கு தீங்கு விளைவித்து கர்ம வினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், பாவமன்னிப்பு கேட்டு வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 25, 2025

தேனி மாவட்டத்தில் பதிவான மழை அளவு

image

தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று (ஏப்ரல் 25) காலை வரை மிதமான மழை பெய்துள்ளது. ஆண்டிப்பட்டி 0 மி.மீ, அரண்மனைப்புதூர் 0 மி.மீ, வீரபாண்டி 0.6 மி.மீ, பெரியகுளம் 0 மி.மீ, மஞ்சளாறு 0 மி.மீ, சோத்துப்பாறை 0.5 மி.மீ, வைகை அணை 0 மி.மீ, போடிநாயக்கனூர் 0 மி.மீ, உத்தமபாளையம் 15.8 மி.மீ, கூடலூர் 18.6 மி.மீ, பெரியாறு அணை 0.6 மி.மீ, தேக்கடி 16.8 மி.மீ, சண்முகா நதி 0 மி.மீ. சராசரி மழை அளவு =4.03 மி.மீ

error: Content is protected !!