News April 25, 2025
நாகை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தொழிலாளர் தினம் வருகின்ற மே.1ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து வகை அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். இதனை மீறி அன்றைய தினம் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்
Similar News
News April 25, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News April 25, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

நாகைக்கு அருகில் மயிலாடுதுறை, கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தியாம். SHARE IT.
News April 25, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)