News April 25, 2025
வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
Similar News
News August 25, 2025
கருர்: பாலியல் தொழில் செய்த பாஜக பிரமுகர்!

கரூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைக் குறிவைத்து, ஆசை வார்த்தை காட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுபடி, தாந்தோணிமலை, ஊரணிமேட்டு பகுதியில் உள்ள ஓர் வீட்டில் சோதனை நடத்தி அங்கு பாலியல் தொழில் செய்ததாக பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதியை கைது செய்தனர்.
News August 25, 2025
கரூர்: தட்டித் தூக்கிய செ.பாலாஜி!

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தளபதி அரங்கத்தில் திமுக கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று(ஆக.24) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
News August 25, 2025
கரூர்: வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் குடிநீர், மின்சாரம், நலத்திட்ட உதவிகள், விதவை மற்றும் முதியோர் பென்ஷன், கல்வி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்க வாய்ப்பு கிடைக்கப்படும்.