News April 25, 2025
தண்டனை கைதி நீதிபதிக்கு கொலை மிரட்டல்

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. உடனே இருவரும் ரகளையில் ஈடுபட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.மேலும் நீதிமன்றத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்தி நீதிபதியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Similar News
News October 19, 2025
மதுரை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கிவரும் நிலையில், அசைவ உணவு சமைப்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் மாலை முதலே குவிந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி வருகின்றனர்.
News October 19, 2025
மதுரையில் தீபாவளிக்கு கனமழை.!

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக மதுரையில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
மதுரை: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

மதுரையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.