News April 25, 2025
திருச்செந்தூர் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூர், நடுநாலுமூலை கிணறு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வம் (25). கடந்த 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.நீதிபதி சுரேஷ், அருள்செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
Similar News
News April 25, 2025
தூத்துக்குடி: விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி

புதுக்கோட்டை அருகே உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தத்துரூப ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
News April 25, 2025
தூத்துக்குடி: உதவி லோகோ பைலட் பணி – மதுரை கோட்டம் அறிவிப்பு

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை<
News April 24, 2025
குவாரி குத்தகை உரிமைத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், கல்குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் நேரடியாக மற்றும் தபால் மூலமாக விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த முறையை எளிமையாக்கும் வகையில் கடந்த 10ஆம் தேதி முதல் உரிமம் பெறுவோர் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.