News April 25, 2025
சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு வெட்டு போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி ராமசாமி கோவில் மேல தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரி செல்வி (54). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் (32) என்பருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டதில் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று (ஏப்.24) மீண்டும் ஏற்பட்ட பிரச்சனையில் கிருஷ்ணன் சுந்தரி செல்வி முதுகில் அரிவாளால் வெட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
Similar News
News April 25, 2025
அரசு பேருந்துடன் மினி லொடு வேன் மோதி விபத்து

திசையன்விளையில் இருந்து நவ்வலடி நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நவ்வலடியிலிருந்து திசையன்விளை நோக்கி வந்த மினி லோடு வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லோடி வேன் சாலையில் கவிழந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News April 25, 2025
நெல்லை வெற்றிகரமாக நடக்கும் அறுவை சிகிச்சை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையில் Dual Chamber Pacemaker அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்றும் தற்போது வரை 25 நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று (ஏப்.25) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை 25 தடவை இந்த அறுவை சிகிச்சை, நெல்லை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
News April 25, 2025
நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 158 % மழை

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுகுமார் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 106.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் வழக்கமான மழை அளவான 41.30 மில்லி மீட்டரை விட 158.83% அதிகம் ஆகும். நடப்பு ஏப்ரல் மாதத்தில் 23ஆம் தேதி வரை 63.10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 5.51% கூடுதல்.