News April 25, 2025
மகளிர் உரிமைத் தொகை.. நல்ல செய்தி வந்தாச்சு!

கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜுன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 3 மாதங்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என Dy CM உதயநிதி கூறி இருந்தார். இந்நிலையில், முறையான அறிவிப்பு கருணாநிதி பிறந்தநாளையொட்டி வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பயனர்களின் வங்கிக் கணக்கில் ஜுலை முதல் ₹1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News April 25, 2025
11-ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வு.. கருணை மதிப்பெண்

11-ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24-வது கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருப்பதாகவும், ஆதலால் அந்தக் கேள்விக்கு சரியாகவோ, தவறாகவோ எந்தப் பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதாெடர்பாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
News April 25, 2025
பஹல்காம் எதிரொலி: CM-களுக்கு அமித் ஷாவின் உத்தரவு!

நாட்டில் இருக்கும் அனைத்து CM-களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மாநிலத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 200 பேர் இருப்பதாக முன்னரே தகவல் வெளிவந்திருந்தது.
News April 25, 2025
மோடி உங்களை தூங்க வைப்பார்; பாஜக தலைவர்

மோடி எதுவும் செய்ய மாட்டார், பிஹார் சென்று உரை நிகழ்த்துவதற்குப் பதிலாக அவர் காஷ்மீருக்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது நாம் நம்பிக்கை இழந்து வீட்டிற்குச் செல்வோம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விஷயம் முடிந்துவிட்டது. மோடி, ‘அங்கு எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லி உங்களைத் தூங்க வைப்பார் எனவும் அவர் சாடியுள்ளார்.