News April 25, 2025
மாணவர் சேர்க்கை அதிகரிக்க இதை பண்ணுங்க: அன்புமணி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2025- 26ம் கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போதிய ஆசிரியர்கள் இல்லாததும் இதற்கு காரணம் எனத் தெரிவித்த அன்புமணி, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News April 25, 2025
பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார். 45 ஆண்டுகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வயது 63. அவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்த போதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. மிக பிரபலமான, ‘Friday the 13th’ மற்றும் ‘Knots Landing’ போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார் லார். இவர் அதிகமாக, நடித்திருப்பது பேய் படங்களிலும், தொடர்களிலும் தான். #RIP.
News April 25, 2025
தொப்பை கொழுப்பு எளிதில் குறைய…

தற்போதைய சூழலில் பலரும் தொப்பை போட்டு ரொம்ப கஷ்டப்படுகின்றனர். அதை குறைக்க டாக்டர்கள் சில டிப்ஸை வழங்குகின்றனர். சாப்பிடும் அளவை குறைக்காமல், 3 வேளை சாப்பாட்டை 2 வேளையாக குறைக்க அறிவுறுத்துகின்றனர். இதனை 3 மாதங்களுக்கு பின்பற்ற வேண்டுமாம். ஆனால், இந்த டயட்டை மேற்கொள்வதற்கு முன், முதலில் டாக்டரிடம் ஆலோசித்து உங்கள் உடலுக்கு உகந்த உணவுகளை தேர்வு செய்திட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News April 25, 2025
BREAKING: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து!

இபிஎஸ்-க்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக, கே.சி.பழனிசாமி இபிஎஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.