News April 25, 2025

26ஆம் தேதி திருநங்கைகளுக்கு குறைதீர் முகாம் 

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு 26.04.2025 அன்று திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் சுகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Similar News

News April 25, 2025

நெல்லை: உதவி லோகோ பைலட் பணி – மதுரை கோட்டம் அறிவிப்பு

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *நெல்லை மக்களே மறக்காமல் அப்பளை பண்ணுங்க*

News April 25, 2025

26ஆம் தேதி வெறி நோய் தடுப்பூசி முகாம்

image

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரியில் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் அடையலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

News April 25, 2025

சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு வெட்டு போலீசார் விசாரணை

image

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி ராமசாமி கோவில் மேல தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரி செல்வி (54). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் (32) என்பருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டதில் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று (ஏப்.24) மீண்டும் ஏற்பட்ட பிரச்சனையில் கிருஷ்ணன் சுந்தரி செல்வி முதுகில் அரிவாளால் வெட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!