News April 25, 2025
அப்பாடா.. சொந்த மண்ணுல ஜெயிச்சிட்டோம்!

இதுதான் RCB ரசிகர்களோட தற்போதைய ரியாக்ஷன். வெளி மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அந்த அணிக்கு, சொந்த மைதானமான பெங்களூருவில் வெற்றி கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறது RR அணி. சொந்த மண்ணில் முதல் 3 போட்டிகளில் தோற்ற RCB, நேற்றைய போட்டியில் வாகை சூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் விளையாடிய RCB, 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.
Similar News
News September 18, 2025
PM மோடியின் முக்கிய முதலீடுகள்

75வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ₹3.43 கோடி ஆகும். கடந்த மார்ச் 31-ம் தேதி, அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி SBI வங்கியில் ₹3,26,34,258 பிக்சட் டெபாஸிட் ஆக வைத்துள்ளார். அதே போல போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் ₹9,74,964 முதலீடு செய்திருக்கிறார். அவரிடம் உள்ள 4 தங்க மோதிரங்களின் மதிப்பு ₹3,10,365 ஆகும்.
News September 18, 2025
ராசி பலன்கள் (18.09.2025)

➤மேஷம் – இன்பம் ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – அன்பு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – போட்டி ➤கன்னி – அசதி ➤துலாம் – சாந்தம் ➤விருச்சிகம் – முயற்சி ➤தனுசு – ஓய்வு ➤மகரம் – பாராட்டு ➤கும்பம் – பரிவு ➤மீனம் – பாசம்.
News September 18, 2025
இந்த நடிகைக்கு ₹530 கோடி சம்பளமாம்..!

உலகம் முழுவதுள்ள இளசுகளை கவர்ந்துவரும் ஹாலிவுட் இளம் நடிகை சிட்னி ஸ்வீனி, பாலிவுட் சினிமாவில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், அவருக்கு ₹530 கோடி சம்பளம் வழங்க பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா எனத் தெரியவில்லை. அப்படி உண்மையானால், பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமே அவர்தான்.