News April 25, 2025
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

▶ உண்மையான போருக்கு எதிரான ஒரு போரை தொடங்க வேண்டுமென்றால், அதனை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ▶ வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. அவர்களின் கொள்கையால்தான் கொல்லப்படுகிறார்கள். ▶ அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.
Similar News
News November 6, 2025
நேர்மையாக தேர்தல் நடந்தால், NDA இருக்காது: பிரியங்கா

பிஹார் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், கோவிந்த்கஞ்ச் பகுதியில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். இதில் பேசிய அவர், பிஹார் தேர்தல் நேர்மையாக நடந்தால், NDA ஆட்சி தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார். வளர்ச்சியை விட மதத்திற்கே பாஜக முன்னுரிமை அளிப்பதாக விமர்சித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் பிஹாரில் 27 பாலங்கள் இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டினார்.
News November 6, 2025
நாளையுடன் முடிகிறது… உடனே இதை பண்ணுங்க

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை அப்லோடு செய்ய நாளையே(நவ.7) கடைசி நாள் என TNPSC தெரிவித்துள்ளது. நாளை சான்றிதழ்களை அப்லோடு செய்யாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல பரிசீலிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<
News November 6, 2025
டி20ல் வாஷிங்டன் சுந்தர் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தினார். இந்நிலையில், சர்வதேச டி20-யில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையையும் சுந்தர் பெற்றுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், இந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கியுள்ளார். இதன்மூலம் 3 ஃபார்மட்டிலும் தடம் பதிக்கும் ஆல்ரவுண்டராக வாஷி உருவாகி வருகிறார்.


