News April 25, 2025
IPL: ஒரே ஓவரில் 6, 6, 4, 4..!

பெங்களூரு அணி வீரர் புவனேஸ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் ராஜஸ்தான் வீரர்கள் ஜுரல், ஷுபம் துபே சேர்ந்து 22 ரன்கள் விளாசினர். முதல் பந்தில் ஜுரல் சிக்சர் விளாச, 3-வது பந்தை ஷுபம் துபே சிக்சர் அடித்து அசத்தினார். இதனை அடுத்து, 5, 6-வது பந்துகளையும் ஜுரல் பவுண்டரிக்கு பறக்கவிட்டு பெங்களூரு மைதானத்தில் இருந்த ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
Similar News
News April 25, 2025
விவேக் இறப்புக்கு போகலையா? வடிவேலு ஓபன் டாக்

விவேக் இறப்புக்கு நான் போகவில்லையா? அவர் வீட்டுக்குச் சென்று, அவரது மனைவியிடம் துக்கம் விசாரித்ததாகவும், அவர் இறந்தபோது தானும் மிக மோசமாகத்தான் இருந்தேன் எனவும் விவேக் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து வடிவேலு கேங்கர்ஸ் பட ப்ரோமோஷன் நிகழ்வில் விளக்கம் அளித்துள்ளார். ராஜ்கிரண் உடனான உரசலுக்கும் விளக்கம் அளித்துள்ள வடிவேலு, கேப்டன் குறித்தான சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைப்பாரா?
News April 25, 2025
KTK முன்னாள் அமைச்சர் ராமையா காலமானார்

கர்நாடக (KTK) காங்கிரஸ் EX அமைச்சரும், சிருங்கேரி தொகுதி EX MLAவுமான பெகனே ராமைய்யா (90) காலமானார். 1978-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ராமைய்யா (ராகுலுடன் கை குலுக்குபவர்), ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் காலமானார். RIP.
News April 25, 2025
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

மார்ச் 2024-ல் ₹2 குறைந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரை ₹100.80, ₹92.39 என்றே தொடர்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $70-க்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், எரிபொருள்களின் விலை குறையாததற்கு இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அதிகரிப்பதும் காரணமாக உள்ள நிலையில், உள்நாட்டு வரிகள், கமிஷன்கள், தேவைகள் ஆகியவையும் காரணிகளாக உள்ளன. எப்போதுதான் பெட்ரோல், டீசல் விலை குறையுமோ?