News April 25, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
Similar News
News April 25, 2025
தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரத்தில் கொலை

ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புராஜன் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான நிலையில் அவரது அக்காள் ராணி போலீசில் புகார் அளித்தார். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் 1 மாதத்திற்கு முன்பு நம்புராஜன் அவருடைய நண்பருடன் மது அருந்திய போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நம்புராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர் நம்புராஜனை கொலை செய்து உடலை புதைத்தது தெரியவந்துள்ளது.
News April 25, 2025
பாஜக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் ஆன்மா அமைதி பெற பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மத்திய கயிறு வாரிய முன்னாள் தலைவர் குப்புராமு, மத்திய தென்னை வாரியத்தலைவர் நாகராஜன், கவுன்சிலர் குமார், சிறுபான்மை பிரிவு மாநில செயலர் தலைவர் அஜ்மல்கான், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
News April 25, 2025
இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு முடிவடைந்தது. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ், ஹைடெக் லேப் மற்றும் பள்ளியில் உள்ள தளவாடப் பொருட்களுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றி இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.