News April 25, 2025
தேசத்துரோக வழக்கில் MLA கைது

பஹல்காம் தாக்குதலில் மோடி, அமித் ஷாவிற்கு தொடர்பிருப்பதாக கூறிய <<16202633>>அசாம் MLA<<>> அமினுல் இஸ்லாமை, அம்மாநில போலீசார் தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ளனர். பாக்.கிற்கு ஆதரவாக அவர் பேசிய வீடியோவை பார்த்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, புல்வாமா தாக்குதலை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி BJP வெற்றி பெற்றதை போல், பஹல்காம் தாக்குதலிலும் BJP-யின் சதி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
Similar News
News November 9, 2025
இந்த டீ குடிச்சிருக்கீங்களா?

சுடச்சுட டீ குடிப்பதே பெரும்பாலோருக்கு ஹேப்பி டைமாக இருக்கிறது. ஒவ்வொரு வகை டீ-யும், தனித்தனி ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அவை என்னென்ன டீ, அதனால் என்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டீ பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 9, 2025
₹110 கோடிக்கு விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ OTT உரிமம்

விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகனுக்கு பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் படத்தின் முதல் பாலான தளபதி கச்சேரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனிடையே படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும் கிட்டத்தட்ட ₹110 கோடிக்கு ‘ஜனநாயகன்’ OTT உரிமம் விற்கப்பட்டுள்ளதாம்.
News November 9, 2025
நகை கடன்… முக்கிய அறிவிப்பு

வங்கிகளில் தங்கத்தை போன்று <<16496506>>வெள்ளி நகைகளை<<>> அடகுவைத்து கடன் பெறும் வசதி 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. இதில் முக்கிய கட்டுப்பாடாக , 12 மாதங்களுக்குள் அடகுவைத்த வெள்ளியை மீட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தங்கத்தை போன்று வட்டியை செலுத்தி மறு அடகு வைக்கும் வசதி இல்லை எனத் தெரிகிறது. மீட்கத் தவறினால், வழக்கம்போல் ஏலம் விடும் நடைமுறை தொடங்கப்படும். SHARE IT.


