News April 24, 2025
கோகுல இந்திராவின் கணவர் காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவரும், அதிமுக நிர்வாகியுமான சந்திரசேகர் காலமானார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
Similar News
News April 25, 2025
போரை நிறுத்துங்கள்.. புடினிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

உக்ரைனை உடனான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், கீவ் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘மிகவும் மோசமான நேரம். புதின் நிறுத்துங்கள். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News April 25, 2025
மாணவர் சேர்க்கை அதிகரிக்க இதை பண்ணுங்க: அன்புமணி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2025- 26ம் கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போதிய ஆசிரியர்கள் இல்லாததும் இதற்கு காரணம் எனத் தெரிவித்த அன்புமணி, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
News April 25, 2025
டிராகன் பட பாணியில் மோசடி.. கடைசியில் ட்விஸ்ட்!

டிராகன் படத்தில் வருவதுபோல் பெங்களூருவில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்தவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவன ஆன்லைன் இன்டர்வியூவில் நண்பரின் உதவியுடன் பாஸ் ஆன பிரசாந்த்(20), பணிக்கு சேர்ந்தபோது சிக்கிக் கொண்டுள்ளார். அவரது திறன், பேச்சில் சில மாற்றங்கள் தென்பட்டதால் மாட்டிக் கொண்ட அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரீல் ‘டிராகனுக்கு’ வந்த சோதனை!