News April 24, 2025

ஆடுகளத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்

image

ஸ்காட்லாந்தில் பிரபல கால்பந்து வீரர் பிரையன் மார்கன் (35), காலமானார். ஆடுகளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மாரடைப்பு (cardiac arrest) ஏற்பட, ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல், அவரின் உயிர் பிரிந்தது. கடந்த ஆண்டு லீக் ஃபைனலில், அவரின் Sauchie Juniors அணிக்காக கோல் அடித்து கோப்பையை வென்று கொடுத்த மார்கனின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News April 25, 2025

போப் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர்

image

போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் காலமான போப் பிரான்சிஸ் உடல் நாளை (ஏப்.26) இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதில், பங்கேற்க வாடிகன் நகருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று செல்லவுள்ளார் என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 317 ▶குறள்: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. ▶பொருள்: எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

News April 25, 2025

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..!

image

பேஸ்பால் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேநேரத்தில், இந்திய மகளிர் பேஸ்பால் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

error: Content is protected !!