News April 24, 2025

சுவையான தூத்துக்குடி மீன் பிரியாணி

image

தூத்துக்குடி மீன் பிரியாணிக்கு தனி சிறப்பு உள்ளது. இந்த பிரியாணியில், திருக்கை, கணவாய், பாறை அல்லது பிற கடல் மீன்களை பயன்படுத்தப்படுகின்றன. தூத்துக்குடி பகுதியின் தனித்துவமான மசாலா கலவைகளாலும், கடல் மீனின் சுவையாலும், மீன் பிரியாணி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தூத்துக்குடி கடலோர பகுதிகளில் மீன் பிரியாணியை சுவைக்க முடியும். நீங்கள் சுவைத்துள்ளீர்களா? சுவைக்காத உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

Similar News

News April 24, 2025

குவாரி குத்தகை உரிமைத்துக்கு விண்ணப்பிக்கலாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில், கல்குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் நேரடியாக மற்றும் தபால் மூலமாக விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த முறையை எளிமையாக்கும் வகையில் கடந்த 10ஆம் தேதி முதல் உரிமம் பெறுவோர் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

News April 24, 2025

முத்தமிழறிஞர் கலைஞர் மாவட்ட அளவிலான செம்மொழி நாள் விழா

image

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. பள்ளிக்கு – 09.05.2025 மற்றும் கல்லூரிக்கு – 10.5.2025 நடைபெற உள்ளது. முதல் 150 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7000 ரூபாய் , மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9442881369 இந்த எண்ணை அழைக்கவும்.

News April 24, 2025

கோவில்பட்டியில் 200 பண்ணை குட்டைகள் திட்டம்

image

கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன் நேற்று விடுத்துள்ள செய்தியில், விவசாய நிலங்களில் பண்ணைகள் அமைக்க அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது. அந்த வகையில் கோவில்பட்டி வட்டார பகுதிகளில் 200 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!