News April 24, 2025

நெல்லை செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் வசதி

image

பயணிகளின் கோரிக்கையை ஏற்று நெல்லை – செங்கோட்டை ரயிலில் எம்.பி ராபர்ட் புரூஸ் நேற்று பயணம் செய்தார். அப்போது, ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை உடனடியாக ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு, இன்று முதல் 6 கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என எம்.பி தெரிவித்தார். இதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Similar News

News April 25, 2025

26ஆம் தேதி திருநங்கைகளுக்கு குறைதீர் முகாம் 

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு 26.04.2025 அன்று திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் சுகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News April 24, 2025

ரயில்வே கூட்டத்தில் நெல்லை எம்பி பங்கேற்பு

image

மதுரையில் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்று நெல்லைக்கு தேவையான பல கோரிக்கைகளை முன்வைத்தார். இதில் தென்கை ரயில்வே பொது மேலாளர் சரத் ஶ்ரீவத்சா,  மதுரை கோட்ட மேலாளர் சிவகுமார், தலைமை முதன்மை இயக்க மேலாளர் அஜய் கெளசிக், துணை பொது மேலாளர் சுசில்குமார் மௌரியர உள்பட பலர் ங்கேற்றனர்.

News April 24, 2025

+2 கணினி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

image

நெல்லையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர், கணினி இயக்குபவர் காலி இடத்திற்கு 1 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் +2 தேர்ச்சி மற்றும் கணினி படிப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தை tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே.6 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!