News April 24, 2025
BREAKING: பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்

பாக். சேர்ந்தவர்களுக்கு எந்தவித விசாவும் வழங்கப்படமாட்டாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு அமலுக்கு வந்தது. ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசாக்கள் வரும் 27, மருத்துவ விசாக்கள் 29-ம் தேதி முதல் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேறவும், தற்போது பாக்.-ல் உள்ள இந்தியர்கள் உடனே நாடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
IPL: ஒரே ஓவரில் 6, 6, 4, 4..!

பெங்களூரு அணி வீரர் புவனேஸ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் ராஜஸ்தான் வீரர்கள் ஜுரல், ஷுபம் துபே சேர்ந்து 22 ரன்கள் விளாசினர். முதல் பந்தில் ஜுரல் சிக்சர் விளாச, 3-வது பந்தை ஷுபம் துபே சிக்சர் அடித்து அசத்தினார். இதனை அடுத்து, 5, 6-வது பந்துகளையும் ஜுரல் பவுண்டரிக்கு பறக்கவிட்டு பெங்களூரு மைதானத்தில் இருந்த ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
News April 25, 2025
ராசி பலன்கள் (25.04.2025)

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – பயம் ➤மிதுனம் – கவலை ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – நோய் ➤கன்னி – துன்பம் ➤துலாம் – மகிழ்ச்சி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – அமைதி ➤மகரம் – தாமதம் ➤கும்பம் – புகழ் ➤மீனம் – தடங்கல்.
News April 25, 2025
தேசத்துரோக வழக்கில் MLA கைது

பஹல்காம் தாக்குதலில் மோடி, அமித் ஷாவிற்கு தொடர்பிருப்பதாக கூறிய <<16202633>>அசாம் MLA<<>> அமினுல் இஸ்லாமை, அம்மாநில போலீசார் தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ளனர். பாக்.கிற்கு ஆதரவாக அவர் பேசிய வீடியோவை பார்த்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, புல்வாமா தாக்குதலை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி BJP வெற்றி பெற்றதை போல், பஹல்காம் தாக்குதலிலும் BJP-யின் சதி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.