News April 24, 2025

பாகிஸ்தானியர்கள் வெளியேற TN அரசு உத்தரவு

image

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் தொழில், வர்த்தகம், மருத்துவ ரீதியாக வந்த பாகிஸ்தானியர்களின் விபரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடந்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Similar News

News April 24, 2025

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்தியர்கள் யார்?

image

இந்திய <<16203309>>படை வீரர் <<>>பாகிஸ்தானிடம் சிக்கிய நிலையில் ஏற்கனவே இந்திய வீரர்கள் சிக்கியதும் நினைவுபடுத்தப்படுகிறது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த போது, இந்திய கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடக்கும் போது இந்திய வீரர் நச்சிகேட்டா பாகிஸ்தானிடம் சிக்கினார். இருவரும் பல சித்திரவதைகளுக்கு பின் நாடு திரும்பினர்.

News April 24, 2025

மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அப்டேட்

image

அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுபவர்கள் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் பெற்றாலும், அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எச்ஐவி, பார்கின்சன், தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அரசு துறைகளின் உதவித் தொகை பெற்றாலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2025

AI ஸ்மார்ட் கூலிங் கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்

image

Ray-Ban Meta ஸ்மார்ட் கிளாஸ்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. AI வசதி, பார்க்கும் இடங்களில் உள்ள எழுத்துக்களின் மொழிபெயர்ப்பு, மியூசிக் ப்ளேயர் கண்ட்ரோல், இன்ஸ்டா, வாட்ஸ்அப் மெசேஜ்கள் உள்ளிட்ட பல வசதிகளை இதில் பயனர்கள் பெறலாம். வெறும் ‘Hey Meta’ என்று சொல்வதின் மூலம் இத்தனை வசதிகளையும் நீங்கள் பெறலாம். கடந்த 2023-ல் இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

error: Content is protected !!