News April 4, 2024
அமித் ஷாவுக்கு உடல் நலக் குறைவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அவர் நேற்று மதுரை வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு என்ன உடல்நல பாதிப்பு என்ற தகவல் இல்லை.
Similar News
News November 3, 2025
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பது தான். *வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட. *நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். *எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும், சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ள கூடாது.
News November 3, 2025
Chokers இல்ல… நாங்க சாம்பியன்ஸ்

என்ன தான் திறமை இருந்தாலும் கோப்பையை வெல்லாத அணியை வசைபாடி கொண்டே தான் இருப்பார்கள். மகளிர் ODI WC வரலாற்றில் 1997, 2000-ல் அரையிறுதி வரை முன்னேறியும், 2005 மற்றும் 2017-ல் இறுதிப்போட்டியில் விளையாடி ரன்னர் அப் ஆக வெறும் கையுடன் திரும்பியதால் இந்திய அணி மீது Chokers டேக் இருந்தது. இன்றைய வெற்றியானது Chokers டேக்கை உடைத்ததோடு மட்டுமின்றி பல விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
News November 3, 2025
அன்று கபில் தேவ்.. இன்று ஹர்மன்பிரீத் கவுர்

ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா தற்போது கோலோச்சுவதற்கு 1983 உலகக் கோப்பை வெற்றி முக்கியமானதாகவும். கபில் தேவ் அண்ட் கோ வெற்றி, இந்திய கிரிக்கெட்டுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவ்வெற்றியால் ஊக்கமடைந்து சச்சின், தோனி, கோலி, ரோஹித் போன்ற பல ஜாம்பவான்கள் உருவெடுத்தனர். அதுபோல, மகளிர் WC-ல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான வெற்றியின் உந்துதலால் எதிர்காலத்தில் பல நட்சத்திர வீராங்கனைகள் உருவாவார்கள்.


