News April 24, 2025
செகந்திராபாத் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது. புதன்கிழமை தோறும் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில் காரைக்குடிக்கு வியாழக்கிழமை இரவு 8.30-க்கு சென்றடையும். தொடர்ந்து சிவகங்கை (இரவு 9.13), மானாமதுரை (இரவு 9.40), ராமநாதபுரம் (இரவு 10.28) வழியாக ராமேஸ்வரத்துக்கு நள்ளிரவு 12.15க்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News October 23, 2025
JUST IN சிவகங்கை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 23, 2025
சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவு

மானாமதுரையில் பின்வரும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு.
7541- மானாமதுரை நகர், 7544- ரயில்வே நிலையம், 7663- கீழமேல்குடி, 7669- முத்தனேந்தல், 7680- கஞ்சிமடை, 7706- வளநாடு விலக்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய கடைகள் மருது சகோதரர்களின் 224வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மதியம் முதல் நாளை வரை இயங்காது என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.
News October 23, 2025
சிவகங்கை: ரூ.8.59 லட்சம் விதை விற்பனை செய்ய தடை

சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய், ராமநாதபுரம் துணை இயக்குனர் அப்ராம்சா ஆகியோர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். உரிய விதிகளை பின் பற்றாத விதை விற்பனை நிலையங்களில் ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 635 மதிப்புள்ள விதை இருந்த களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.