News April 24, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் அறிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *தெரிந்தவர்களுக்கு பகிரவும்*

Similar News

News August 13, 2025

ஆடி கிருத்திகை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே ஆகஸ்ட் 14 முதல் 18 வரை ஐந்து நாட்களுக்கு அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து காலை 10:20, மதியம் 1, மற்றும் 2:50 ஆகிய நேரங்களிலும், திருத்தணியில் இருந்து காலை 10:50, மதியம் 1:30, மற்றும் 3:20 ஆகிய நேரங்களிலும் புறப்படும்.

News August 13, 2025

திருவள்ளூர்: B.Sc,B.C.A,M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 13, 2025

மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (13.08.2025) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது புகார்களை மனுவாக அளித்தனர்.

error: Content is protected !!