News April 24, 2025

‘எடப்பாடியாரை வணங்கி’ செங்கோட்டையன் புகழாரம்!

image

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று ‘எடப்பாடியாரை வணங்கி’ என செங்கோட்டையன் பேசியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் இபிஎஸ் நல்லாட்சி நடத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது, இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததை போல் இருப்பதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News November 4, 2025

IMPORTANT: இத பண்ணலனா பான் கார்டு வேலை செய்யாது!

image

டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் கார்டு இணைக்க வேண்டியது கட்டாயம் என UIDAI அறிவித்துள்ளது. இணைக்காவிட்டால் வரும் ஜனவரி 1, 2026 முதல், பான் கார்டு வேலை செய்யாது என எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், புதிதாக பான் கார்டு வாங்குபவர்களுக்கு ஆதார் தானாகவே இணைக்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதாரை பான் கார்டுடன் இணைக்க, <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அனைவருக்கும் இப்பதிவை பகிருங்கள்.

News November 4, 2025

கோவை சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை உறுதி: CM

image

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனித தன்மையற்றது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூர குற்றச்செயல்களை கண்டிக்க எந்த கடுஞ்சொல்லும் போதாது என்று கூறியுள்ள அவர், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத்தர, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 4, 2025

பரபரக்கும் IPL Trade.. போட்டி போடும் அணிகள்!

image

வரும் 2026-ம் ஆண்டுக்கான IPL வீரர்கள் Trade-ல் இந்த மூன்று மாற்றங்கள் நிகழ, அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. வெளியாகி வரும் செய்திகளின் படி, ★GT அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், CSK அணிக்கு மாறலாம் ★DC அணியின் KL ராகுல், KKR அணியில் மாறக்கூடும் ★RR கேப்டன் சஞ்சு சாம்சன், DC-க்கு இணையலாம். டிசம்பர் மாதத்திற்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!