News April 24, 2025
நடிகைகள் ரேப்: இயக்குநர் மீதான வழக்கு மறுவிசாரணை

ME TOO விவகாரம் எழுந்தபோது, ஹாலிவுட் இயக்குநர் ஹார்வி வெயின்ஸ்டன் மீது நடிகைகள் உள்ளிட்ட சுமார் 80 பேர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான வழக்கில் 2020-ல் அவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் மேலும் 2 பேர் தெரிவித்த புகார்கள் அடிப்படையில் வழக்கு மீது மறுவிசாரணை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹார்வி வெயின்ஸ்டன் வீல் சேரில் வந்து ஆஜரானார்.
Similar News
News April 24, 2025
SAY NO TO PSL… அதிரடி நடவடிக்கை

IPL போல பாகிஸ்தானில் PSL நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் PSL கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்தியாவில் ஃபேன்கோட் இணையதளத்தின் வழியாக PSL-ஐ இந்தியாவில் பார்க்கும் வசதி உள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் PSL ஒளிபரப்பப்படாது. செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 24, 2025
குடும்பமே உயிர்தப்பிய சம்பவம்; கல்மா என்றால் என்ன?

‘மற்றவர்களுடன் நானும் கல்மா சொன்னதால் என்னுடைய குடும்பம் உயிர் பிழைத்தது’ என பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய அசாம் பல்கலை பேராசிரியர் தேபாசிஷ் பட்டாச்சார்யா கூறியுள்ளார். கல்மா என்பது அல்லாஹ் ஒருவரே கடவுள் என்றும், முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் முழுமையான நம்பிக்கை கொள்வதாகும். இந்த கல்மாவில் மொத்தம் 6 வகைகள் உள்ளன.
News April 24, 2025
இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இருநாடுகளும் எல்லைகளில் படைகளை குவித்தும், ஏவுகணைகளை சோதனை செய்தும் வருகின்றன. சர்வதேச ஒப்பந்தங்கள், வர்த்தகங்களை ரத்து செய்துள்ளன. மறுபுறம், குடியரசுத் தலைவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது. பாக்.-ஐ எப்படி பழிவாங்குவது என்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.