News April 24, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் அறிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம்நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News February 27, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

பள்ளிப்பட்டு அடுத்த கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரய்யா(60). இவர், நேற்று முன் தினம் காலை தனது வீட்டின் எதிரே உள்ள மாட்டு கொட்டாய்க்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் , மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 27, 2026

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!