News April 24, 2025
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம்

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழைகம் விரைவில் அமைக்கப்படும் என சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் கருணாநிதி எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
தஞ்சை: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 8, 2025
தஞ்சை: நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ

கனமழையால் பாதிக்கப்பட்ட சேதுபாவசத்திரம் தெற்கு ஒன்றியம் குருவிக்கரம்பை பகுதி மாசிலா கருப்பையின் இவர்களின் வீடு சேதமடைந்ததை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் நேரில் பார்வையிட்டு, நிதி உதவி வழங்கியும், புதிய வீடு கட்டும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கு.சின்னப்பா, இளைஞரணி அமைப்பாளர் வை.மதன், கிளை செயளாலர் மு.ஏகாம்பரம் உடனிருந்தனர்.
News December 8, 2025
தஞ்சை: மாணவன் கொலை – விசாரணை தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி இன்று பள்ளியில் விசாரணை நடத்த உள்ளார். இந்த வழக்கில் 15 பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் மோதல் குறித்து விசாரணை நடத்த உள்ளார்.


