News April 24, 2025

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

image

அரசு ஊழியர்களை பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் டாட்ஜ்(DOGE) துறை தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விலகியுள்ளார். USA அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் மஸ்க் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Similar News

News April 24, 2025

BREAKING: பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர்..

image

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர் சிக்கிக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த வீரர் பி.கே.சிங்,
தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த பாக்., ராணுவம் சிறையில் அடைத்துள்ளது. அவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

News April 24, 2025

வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு.. முக்கிய ஆலோசனை

image

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாட்டு தூதர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளது. மேலும் இந்தியாவின் முடிவிற்கு மற்ற நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைக்க உள்ளார்.

News April 24, 2025

குடியரசுத் தலைவரை சந்தித்த அமித் ஷா

image

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பான நிலவரத்தை குடியரசுத் தலைவரிடம் அமித்ஷா எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் போது ஜெய்சங்கரும் உடன் இருந்தார். வெளியுறவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஜெய்சங்கர் குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளித்தார்.

error: Content is protected !!