News April 24, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 13, 2025
திருப்பத்தூர்: கிராம சாபை கூட்டம் மக்களுக்கு அழைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வருகின்ற (15-08-2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளில் 2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்தர கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பொதுசெலவினம் , தணிக்கை அறிக்கை , குடிநீர் விநியோகத்தின் உறுதி , அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற தலைப்புகளில் விவாதம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .
News August 13, 2025
அதிர்ச்சி: திருப்பத்தூரில் 9,005 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 பேர் நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜனவரி- ஆக.10 வரை சுமார் 9,005 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் தெரு நாய் தொல்லை உள்ளதா? மாவட்டத்தின் <
News August 13, 2025
BIG NEWS: திருப்பத்தூரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு

கந்திலி அடுத்த பரதேசிபட்டி ஊராட்சியில் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக தொடர் புகார் எழுந்தது. இதை அறிந்த மருத்துவ மற்றும் ஊரக பணி இணை இயக்குநர் ஞான மீனாட்சி அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இதையே தொழிலாக கொண்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தருமபுரி, சேலத்தை தொடர்ந்து தற்போது திருப்பத்தூரிலும் இந்த கும்பலின் அட்டுழியம் தலை தூக்கி உள்ளது.