News April 24, 2025
பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ X பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Similar News
News April 24, 2025
பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் ஹேப்பி நியூஸ்

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை. இதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
News April 24, 2025
ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு முடிந்து தற்போது மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் கல்லூரிகள் திறப்புக்கான தேதியை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
News April 24, 2025
பாகிஸ்தானியர்கள் வெளியேற TN அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் தொழில், வர்த்தகம், மருத்துவ ரீதியாக வந்த பாகிஸ்தானியர்களின் விபரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடந்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.