News April 24, 2025
திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். இங்கு <
Similar News
News January 15, 2026
திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டி – ஐஜி எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்களும், காளையின் உரிமையாளர்களும் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
திருச்சி: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News January 15, 2026
திருச்சி: டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-II, IIA, குரூப்-IV தேர்வுகளை போட்டி தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


