News April 24, 2025
பைக் விபத்தில் ஐ.டி. ஊழியர் பலி

திருச்சியைச் சேர்ந்த தினேஷ், செங்கண்மால் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சிறுசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 23) நள்ளிரவு வேலை முடிந்து கேளம்பாக்கம் புதிய புறவழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளவந்தாங்கல் ரவுண்டானா அருகே சென்றபோது பைக் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News April 24, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News April 23, 2025
வீட்டில் தங்கத்தை பெருக வைக்கும் செங்கல்பட்டு கோயில்

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் அருள்மிகு காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு அருளும் ஈசன் அதிக சக்தி கொண்டவர் என்பதால் நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், ஒரு துவாரத்திலிருந்து வழிபடுகிறார். இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 23, 2025
குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<