News April 24, 2025
ஏ.சி.யில் இருக்கும் ‘Ton’ எதை குறிக்கிறது தெரியுமா?

புதிதாக ஏ.சி வாங்க போனால், முதலில் அது எத்தனை Ton என்ற கேள்வியே பெரிதாக எழும். 1 Ton என்றால், 1000 கிலோ எடை கொண்டதா? என்ற கேள்வி எழும். ஆனால், இந்த Ton ஏ.சி.யின் எடையை குறிப்பதில்லை. ஏ.சி.யின் Ton என்ற சொல் அதன் குளிரூட்டும் திறனைக் குறிக்கிறது. ஏ.சி மாட்டப்படும் இடத்தை வைத்து இந்த Ton வகையை வாங்கலாம். பெரிய இடம் என்றால், 2 Ton ஏ.சி. சிறிய இடம் என்றால் 1 Ton ஏ.சி.யே போதும்.
Similar News
News April 24, 2025
கற்பனையில் நினைக்காத வகையில் பதிலடி: PM மோடி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என PM மோடி எச்சரித்துள்ளார். பிஹாரின் மதுபானியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கும் எனக் கூறினார்.
News April 24, 2025
இந்த நேரத்தில் தயவு செய்து போனை யூஸ் பண்ணாதீங்க!

நார்மலாகவே போன் அதிகமாக ஹீட்டாகும். அது, சம்மர் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். ஏன், போன் வெடிக்கும் அபாயமும் ஏற்படலாம். அப்படி போன் அதிக ஹீட்டானால், நமக்கு ஒரு எச்சரிக்கை மெசெஜ் வரும். அது மாதிரியான நேரத்தில், என்ன வேலையாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் போனை யூஸ் பண்ணாதீங்க. போனை கொஞ்சம் நேரம் நிழலான இடத்தில் வைத்துவிட்டு, பிறகு யூஸ் பண்ணுங்க. SHARE IT.
News April 24, 2025
‘எடப்பாடியாரை வணங்கி’ செங்கோட்டையன் புகழாரம்!

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று ‘எடப்பாடியாரை வணங்கி’ என செங்கோட்டையன் பேசியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் இபிஎஸ் நல்லாட்சி நடத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது, இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததை போல் இருப்பதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?