News April 24, 2025
எஸ்.ஐ. ஆக ஆசையா? திண்டுக்கல்லில் இலவச பயிற்சி!

திண்டுக்கல் : காவல் சார்பு ஆய்வாளர்கள்(Police Sub-Inspectors) பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன; கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். இதை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 14, 2026
திண்டுக்கல்லில் கொந்தளித்த நிர்வாகி!

திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சி.மகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் எரிவாயு உருளைகள் இல்லாததால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பிரச்னையை எதிா்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
News March 14, 2026
திண்டுக்கல்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க
News March 14, 2026
பழனி வந்த பிரபல நடிகை!

பழனி மலை கோயிலுக்கு நடிகை அமலா பால் நேற்று பிற்பகல் வருகை தந்தார். மலை கோயிலுக்கு ரோப்கார் மூலம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் ரோப்கார் வழியாக மலைப் பாதையில் இருந்து கீழே வந்தார். அப்போது பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


