News April 24, 2025
தொகுதி பங்கீடு.. பாஜக போடும் மெகா பிளான்!

அதிமுக கூட்டணியில் தென் மண்டலத்தில் அதிக தொகுதிகளை பெற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளாராம். 2021-ல் பாஜக 20 தொகுதிகளை பெற்று 4-ல் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால் தற்போது கூடுதல் தொகுதிகளை கேட்க நயினார் கணக்கு போட்டு வருகிறார். ஆனால், இபிஎஸ் இதற்கு பச்சைக்கொடி காட்டுவாரா? என்பது சந்தேகம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 7, 2025
மீண்டும் NDA கூட்டணியில் அமமுகவா? டிடிவி பதில்

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்று டெல்லி பாஜகவினர் மத்தியஸ்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை என டிடிவி தெரிவித்துள்ளார். இந்த கருத்து மூலம் மீண்டும் NDA கூட்டணியில் டிடிவி இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பொறுத்திருந்து பாருங்கள், தேர்தலுக்குள் பல மாற்றங்கள் நடக்கும் என்றார்.
News December 7, 2025
வட மாவட்டங்களில் திமுகவின் மாஸ்டர் மூவ்!

விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகளை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை என பேசி வரும் அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர், லட்சுமணன் உள்ளிட்டோருக்கு மா.செ., பதவி வழங்கியதன் மூலம் கணிசமாக வாக்குகள் கிடைக்கும் என தலைமை நம்புகிறதாம்.
News December 7, 2025
2027 WC-ல் Ro-Ko இடம் பெறுவார்களா? கம்பீர் பதில்

2027 WC-ல் Ro-Ko ஜோடி விளையாடுவார்களா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க BCCI முனைவதாக கூறப்படும் சூழலில், கோச் கம்பீரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2027 WC-க்கு 2 ஆண்டுகள் இருப்பதாக கூறிய அவர், தற்போதைய அணி குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். மேலும், இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதாகவும் கூறினார்.


