News April 24, 2025
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது!

திண்டுக்கல்: மைலாப்பூரைச் சேர்ந்தவர் வில்லியம்சார்லஸ் (41). இவருக்கும் இவரது மனைவி வேளாங்கண்ணி லீமா ரோஸ் (39) என்பவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வில்லியம்சார்லஸ், மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார் வில்லியம்சார்லஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 17, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளன்று காலை 7 முதல் 8 மணி மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News October 16, 2025
திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக (அக்டோபர் 16) இன்று “Loan App மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம்” என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
News October 16, 2025
திண்டுக்கல்: கொலை வழக்கில் தாய், மகன் கைது

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, கூட்டாத்து அய்யம்பாளையத்தில், இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்த மருமகன் ராமச்சந்திரனை அவரது மாமனார் சந்திரன் அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலைக்கு எதிராக ராமச்சந்திரன் உறவினர்கள் திண்டுக்கல் மருத்துவமனை முற்றுகையிட்டனர். SP உத்தரவில் தீவிர விசாரணை நடத்தி சந்திரனின் மனைவி அன்புச்செல்வி மற்றும் அவரது மகன் ரிவீன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.