News April 24, 2025
மலாலா யூசஃப்சாய் பொன்மொழிகள்

▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
Similar News
News April 24, 2025
11 பேரின் உயிர்களை காத்த உப்பு சாப்பாடு

கொச்சியை சேர்ந்த ஆல்பி ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை பஹல்காம் செல்கையில், சாலையோர கடையில் பிரைட் ரைஸ் சாப்பிட்டனர். அதில் உப்பு அதிகம் இருந்ததால், புதிய உணவு தயாரிக்க 1 மணி நேரம் காத்திருந்தனர். அந்த நேரத்தில்தான் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடையில் நேரம் தாமதப்படாமல் பஹல்காம் சென்றிருந்தால், அவர்களும் உயிரிழந்திருப்பர்.
News April 24, 2025
பணத்தை மிச்சமாக்கும் 18 கேரட் தங்கம்.. பின்னணி என்ன?

பணத்தை மிச்சம் செய்ய 18 கேரட் நகைகளை வாங்க நுகர்வோர் ஆர்வம் காட்டி வருவதாக MJDTA தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். 22 கேரட் நகைகளுடன் ஒப்பிடுகையில் 18 கேரட் நகைகள் சவரனுக்கு ₹14,000 வரை குறைவாகக் கிடைக்கின்றன. இதில், சேதாரம் குறைவு, பளபளப்பு, உறுதித்தன்மை அதிகம். ஆனாலும், இந்த நகைகளில் 75% மட்டுமே தங்கம், மீதி அலாய்(உலோக கலவை) என்பதால் மறுவிற்பனை மதிப்பு குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 24, 2025
பஹல்காம் தாக்குதலில் மற்றொரு சோகக்கதை!

பஹல்காமில் மற்றொரு சோகக்கதையும் நிகழ்ந்துள்ளது. UAE-ல் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த நீரஜ் உத்வானியும் (33) இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு 2 ஆண்டுகள் முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. மனைவியுடன் இந்தியா வந்தவர், காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளார். இவரின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, தற்போது நீரஜ்ஜின் தாயார் மற்றும் மனைவி மீளா துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.