News April 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 24- சித்திரை- 11 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: தேய்பிறை
Similar News
News April 24, 2025
மயோனைஸ் விற்பனைக்கு தடை: அரசு அதிரடி முடிவு

பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு மாநில உணவு பாதுகாப்புத்துறை திடீர் தடை விதித்துள்ளது. ஓராண்டுக்கு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால், உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 24, 2025
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதியில் வரும் ஜூலை மாதத்தின் ₹300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் புக்கிங், இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. டிக்கெட் பெற <
News April 24, 2025
இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்த USA துணை அதிபர்

USA துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். ஜெய்ப்பூர் அரண்மனையை நேற்று அவர் பார்வையிட இருந்தது. ஆனால் திடீரென அதை ரத்து செய்து விட்டார். அத்துடன் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு குடும்பத்தினருடன் USA -க்கு வான்ஸ் இன்று புறப்பட்டுச் சென்றார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அவர் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.