News April 23, 2025
தீவிரவாத தாக்குதல்.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 இந்தியர்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர்கள் விரைவில் நலம்பெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
13.72 லட்சம் மனுக்கள்.. வேகமெடுக்கும் பரிசீலனை!

ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெற 13 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசீலனை முடிந்தபின் இம்மாத இறுதியில் விண்ணப்பித்தவர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 17, 2025
12,778 அடி உயரத்தில் இருக்கும் கோயில்.. Goosebumps போட்டோஸ்!

இந்த கோயிலின் போட்டோஸை பார்க்கும் போது, நிச்சயமாக உங்களுக்கு ‘Goosebumps’ வரும். இதுதான் உலகில் அதிக உயரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலாகும். கடல் மட்டத்தில் இருந்து 12,778 அடி உயரத்தில், இமாச்சல பிரதேசத்தில் யூல்லா காண்டா என்ற இடத்தில் பனி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கோயிலின் மெய்சிலிர்க்க வைக்கும் போட்டோக்களை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா X-ல் பதிவிட்டுள்ளார். எப்படி இருக்கு..?
News August 17, 2025
டீ கடை முதல் சாம்பியன் வரை.. என்ன ஒரு Inspiration!

ப்ரோ கபடி லீக்கில் புனேரி பல்தான் அணியை சாம்பியன் ஆக்கிய கேப்டன் அஸ்லாம் இனாம்தார், தனது கடந்த காலத்தை பகிர்ந்துள்ளார். வீட்டில் யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதால், டீக்கடையில் எச்சில் கிளாஸை கழுவுவதில் தொடங்கி அனைத்து பணிகளையும் செய்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், காத்திருப்பு, சுய ஒழுக்கம், கடின உழைப்பு தான் ஒருவரை வெற்றிக்கு அழைத்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.