News April 23, 2025
கண்கள் மஞ்சளாக உள்ளதா?

கண்கள் மஞ்சளாக மாற 3 காரணங்கள் உள்ளன. 1) கல்லீரல் ரத்த சிவப்பணுக்களை உடைப்பதால், எந்தவொரு கல்லீரல் செயலிழப்பும் சிரோசிஸை ஏற்படுத்தும். இதனால் கண்கள் மஞ்சளாகும். 2) பித்த நாளங்கள் பித்தத்தை எடுத்துச் செல்ல முடியாதபோது, அது படிந்து, கண்கள் மஞ்சள் ஆகும். 3) பித்த நாளத்துடன் சேர்ந்து, கணையத்திலிருந்து வரும் குழாய் சிறுகுடலுக்கு வழிவகுக்கிறது. அது பாதிக்கப்பட்டாலும் கண்கள் மஞ்சளாகும்.
Similar News
News April 24, 2025
என்னை மாற்றியது இவர்தான்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

நிகழ்ச்சிகளில் THUG பதில் அளிப்பதிலும், குறும்பு சேட்டை செய்வதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கெட்டிக்காரர். முதலில் INTROVERT ஆக இருந்த தன்னை EXTROVERT ஆக மாற்றியதே இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்தான் என அவர் தெரிவித்துள்ளார். இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி. மகாதேவன் உள்ளிட்டோரிடம் வேலை செய்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், டி.ராஜேந்தர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தன்னை மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
ரோஹித்துக்கு வந்த சோதனை.. 9 வருஷத்துல இதுதான் ஃபர்ஸ்ட்!

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 2 போட்டிகளில் அரைசதம் விளாசுவது 9 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாம். CSK, SRH அணிகளுக்கு எதிராக தற்போது தொடர்ச்சியாக அரைசதம் அடித்த அவர், இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் KKR, RPS அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்திருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ரோஹித் சர்மாவிற்கு இது ஒரு மோசமான சாதனைதான் என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News April 24, 2025
மலாலா யூசஃப்சாய் பொன்மொழிகள்

▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.