News April 23, 2025
கடலுாரில் 25ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் குறைதீர்வு கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News April 25, 2025
கல் சரிந்து விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

விருத்தாசலம் அடுத்த எடையூறை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகள் பவினா (8), இவர் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பவினா நேற்று (ஏப்.24) தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வீடு கட்டுமான பணிக்காக அடுக்கி வைத்திருந்த ஹாலோ பிளாக் கல் சரிந்து பவினாவின் தலையில் விழுந்துள்ளது. இதில் காயமடைந்த சிறுமி பரிதாமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News April 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!