News April 23, 2025
தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
வெற்று விளம்பர திமுக ஆட்சி: நயினார்

4 ஆண்டு ஆட்சியில் திமுக அரசு வெற்று விளம்பரங்களை மட்டுமே செய்து வருவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை CM ஸ்டாலின் நிறைவேற்றாதது ஏன் என அவர், X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது திமுகவின் மற்றொரு போலி தேர்தல் வாக்குறுதி எனவும் விலைவாசியை உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா என்றும் விமர்சித்துள்ளார்.
News September 12, 2025
2026 தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன்

2026 தேர்தல் தொடர்பாக மநீம நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் வரும் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்திக்கவுள்ளார். இதில் 2026 தேர்தல் கூட்டணி மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் மநீம போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாஸிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.
News September 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 12, ஆவணி 27 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை