News April 23, 2025
புதுக்கோட்டை: திருமணத் தடைகள் போக்கும் சுகந்த பரிமளேஸ்வரர்

புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் திருமணஞ்சேரி கிராமத்தில் சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது,திருமணநாதர் என்ற பெயரும் சக்தி பரிமளேஸ்வரருக்கு உண்டு,எனவே திருமணத்தடைகள் ஏற்ப்படுவர்கள் சக்தி பரிம்ளேஸ்வரை தரிசனம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பதே வரலாறே சொல்கிறது,சுகந்த பரிமளேஸ்வரர் ஞானம் பற்றி மற்றவர்களும் தெரிந்துக்கொள்ள SHARE பண்ணுங்க!
Similar News
News December 24, 2025
புதுக்கோட்டை: முதியவர் மீது மோதி பைக்

கந்தர்வக்கோட்டை அடுத்த அரியாண்டிபட்டியிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கு பழனிச்சாமி (67) என்பவர் நேற்று சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியாண்டி சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த ஹரிஹரசுதன் (18) மோதியதில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 24, 2025
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
புதுக்கோட்டையில் 412 பேர் கைது

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் போராடிப்பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 412 பேரை போலீசார் கைது செய்தனர்.


