News April 23, 2025
பாக்.கை தண்டியுங்கள்.. நாடு முழுவதும் ஒரே குரல்

பகல்ஹாமில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, நாட்டு மக்கள் தங்கள் இடையேயான கருத்து வேறுபாட்டை மறந்து பாகிஸ்தானை தண்டிக்க குரல் எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் இதையே வலியுறுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் பல இனம், மொழி மக்கள் வாழ்ந்தாலும் தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று ஒற்றுமையுடன் குரல் கொடுத்து வருகின்றனர். இதுவே இந்தியா!
Similar News
News January 9, 2026
3 போட்டிகளில் திலக் வர்மா கிடையாது: BCCI

விஜய் ஹசாரே தொடரின் போது, கடும் வயிற்றுவலியால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட திலக் வர்மாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் திலக் பங்கேற்க மாட்டார் என BCCI அறிவித்துள்ளது. அவரின் உடல் தகுதிக்கு ஏற்ப கடைசி 2 போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 9, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 9, 2026
‘ஜனநாயகன்’ சிக்கலுக்கான பதில் பாஜகவுக்கு தெரியும்: SP

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் ‘ஜனநாயகன்’ படம் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக பல <<18801486>>காங்கிரஸ் கட்சி<<>> தலைவர்கள் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதனிடையே சினிமா உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பாஜக தலையீடு இருப்பதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விஜயின் திரைப்படம் வெளிவராத ரகசியம் பாஜக தலைவர்களுக்குதான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.


