News April 23, 2025
சர்வதேச புத்தக தினம்

புத்தக வாசிப்பும், படிப்பும் மட்டுமே சமூகத்தை பண்படுத்தும் என்பது சான்றோர் வாக்கு. அதனை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி சர்வதேச புத்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தகங்களில் எதை படிக்க வேண்டும் என்ற கேள்வியே தேவையில்லை. அனைத்தையும் படிக்கலாம். நல்ல புத்தகங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் மோசமான புத்தகங்கள் எப்படி வாழக்கூடாது என்பதையும் கற்றுத்தரும்.
Similar News
News October 14, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்தபோது, <<17996227>>₹2,000 நோட்டுகள்<<>> கிடைத்த செய்தி வைரலாகி வருகிறது. இந்நிலையில், ₹5,884 கோடி ₹2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பவில்லை என RBI தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டு இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம்.
News October 14, 2025
உங்களுக்கு தீபாவளி பரிசு கிடைச்சுதா?

GST-யில் மாற்றம் செய்து தீபாவளி பரிசு என அறிவித்த PM மோடி, இந்த வரிக் குறைப்பால் மக்களுக்கு பணம் மிச்சமாகும் எனக் கூறியிருந்தார். தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பெரும்பாலானோர் புத்தாடை, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருள்கள், எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கியிருப்பீர்கள். வரிக் குறைப்பால், இந்த தீபாவளி ஷாப்பிங்கில் உங்க கிட்ட எவ்வளவு பணம் மிச்சமாச்சு? கமெண்ட்டில் சொல்லுங்க.
News October 14, 2025
டிராவில் முடிந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் 0-2 என்று பின்தங்கி இருந்த இந்தியா பின்னர் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்து கோல்களை அடித்தது. இதனால் 3-2 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையும் பெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் மேலும் ஒரு கோலை அடித்து சமன் செய்தது. புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.