News April 23, 2025
கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்

கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்ததாலும் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்ததாலும் மூலவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். ஒருவர் முழுத்தேங்காயை மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினால் அவருடைய கோரிக்கைகள் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Similar News
News December 13, 2025
ஓசூர்: சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி!

தர்மபுரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருகின்றது. அதற்காக இன்று(டிச.13) காலை 10 மணிக்கு குருப்பட்டி அருகே பயனில்லாத அரசு பள்ளி கட்டடம் ஒன்றை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்தனர். அப்போது அப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பணியாளர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
News December 13, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த கணேசன் என்பவர், சூளகிரி அருகே உள்ள பொன்னால் நத்தம் என்று ஊரில் தனியார் கிரஷர் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். நேற்று (டிச.12 ) இரவு தனது ஊரிலிருந்து வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது, எரண்டபள்ளி கிராமம் அருகே சாலையில் அதிவேகமாக வந்ததால் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மதில் சுவரில் இடித்து விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
News December 13, 2025
கிருஷ்ணகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.(SHARE)


