News April 23, 2025
அட்சய திருதியை.. வெளியான ஷாக் நியூஸ்!

தங்கம் விலை சவரனுக்கு ₹72,120க்கு விற்பனை செய்யப்படுவதால் சாமானியர்களை மட்டுமின்றி, நகைக்கடை வணிகர்களையும் குமுறச் செய்துள்ளது. ஏப்.30 அட்சய திருதியை வரும் நிலையில், அன்று தங்கம் வாங்குவதற்கு முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். விலை குறைந்த பிறகு நகை வாங்கலாம் என பலர் நினைப்பதாகவும், சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நகை வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
Similar News
News April 24, 2025
நிர்வாணமாக உறங்கினால் என்ன ஆகும்?

தளர்வான ஆடை அணிந்து உறங்குவது நல்லது. ஆனால், நிர்வாணமாக உறங்குவது அதைவிட அதிக நன்மைகள் தரும் என்கிறது பிரபல healthline இணையதளம். நிர்வாணமாக உறங்கினால் *விரைவாக தூக்கம் வரும் *நல்ல தூக்கம் கிடைக்கும் *சருமம் பொலிவு பெறும் *ஸ்ட்ரெஸ் குறையும் *எடை கட்டுப்படும் *இதயநோய், டைப்-2 நீரிழிவு ஆபத்து குறையும் *பிறப்புறுப்பு ஆரோக்கியம் மேம்படும் *ஆண்மை அதிகரிக்கும் *தன்மதிப்பு உயரும் *காதல் உறவு மேம்படும்.
News April 24, 2025
ராசி பலன்கள் (24.04.2025)

➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – புகழ் ➤கன்னி – அன்பு ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – சிக்கல் ➤கும்பம் – தாமதம் ➤மீனம் – அனுமதி.
News April 24, 2025
காஷ்மீர் மக்களை நினைத்து ஆண்ட்ரியா வேதனை

பஹல்காம் தாக்குதல் இதயத்தை உலுக்குவதாக நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இதன் பிறகு அதீத கண்காணிப்பிற்கு உள்ளாகப்போகும் காஷ்மீர் மக்களை நினைத்து இதயம் கணப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இச்சூழலில், இச்சம்பவத்தால் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம் / சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களுக்கு நாம் இரையாகி விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.