News April 23, 2025
மகளிர் விடுதிகள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்!

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்.126-ல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Similar News
News November 2, 2025
சேலம்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

சேலம் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 2, 2025
சேலம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 2, 2025
ஆத்துார் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி பலி!

ஆத்துார் தென்னங்குடிபாளையம் ஊராட்சி அய்யனார்பாளையத்தை சேர்ந்த, மஞ்சுளா, நேற்று, வீட்டின் முன் நிலத்தில் பதித்து வைத்துள்ள, 10 அடி ஆழ தொட்டியில், குடத்தில் தண்ணீர் எடுக்க முயன்றார். அப்போது தவறி, தொட்டிக்குள் விழுந்த அவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத் தினர், தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து வெளியேவிட்டு பார்த்தபோது, மஞ்சுளா இறந்திருந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


